1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 2 ஜனவரி 2019 (11:25 IST)

மிட் நைட்டில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி: லைவாக பார்த்த கணவன்; கடைசியில் நடந்த விபரீதம்

நள்ளிரவில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை அவரது கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி விமலா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
 
மாரிமுத்து வெளியே செல்லும் நேரத்தில் விமலாவிற்கு குமார் என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறி இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர்.
 
இதனையறிந்த மாரிமுத்து, தனது வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தார். இரவு தனது மனைவி மகள்களுடன் படுத்துறங்கினார் மாரிமுத்து. விடியற்காலையில் திடீரென விழித்துப்பார்த்தபோது விமலா காணவில்லை.
 
அவரை தேடிக்கொண்டு சென்றபோது, விமலா தனது கள்ளக்காதலனான குமாருடன் உல்லாசத்தில் ஈடுபட்டதை மாரிமுத்து நேரில் பார்த்ததாக தெரிகிறது. இதனால் கோபம் தலைக்கேறி விமலாவையும் குமாரையும் இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் குமார் தப்பிவிட, விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், மாரிமுத்துவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதலால் ஒரு குடும்பமே நடுத்தெருவிற்கு வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.