வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 3 டிசம்பர் 2018 (10:50 IST)

நானோ பத்தாங் க்ளாஸ், அவளோ பட்டதாரி: மணக்கோலத்தில் மணமகன் செய்த வேலை

மணமகள் தன்னை விட அதிகமாக படித்திருந்ததால் மணமகன் தாழ்வு மனப்பான்மையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மலைக்கோட்டை சறுக்குபாறையைச் சேர்ந்தவர் தினேஷ். பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கும் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.   
 
இந்நிலையில், தினேஷுக்கும் புவனேஷ்வரி என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. புவனேஷ்வரி ஒரு பட்டதாரிப் பெண்.
 
ஆரம்பம் முதலே தினேஷுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. மணப்பெண் தன்னை விட அதிகமாக படித்திருக்கிறார் என்ற தாழ்வு மனப்பான்மை அவருக்குள் இருந்திருக்கிறது. 
 
நேற்று அவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. திருமணம் நடப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் திருமண வீடு சோகமயமானது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.