புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. வாய்ப்புகள்
Written By
Last Updated : புதன், 18 டிசம்பர் 2019 (17:52 IST)

ஐ டி ஐ படித்தவர்களுக்கு திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை

மத்திய அரசு நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறூவனத்தில் (பெல்) ஐ டி ஐ முடித்தவர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வுகள் நடைபெற இருக்கின்றன.
 

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஐடிஐ முடித்து முறையான சான்றிதழ் வைத்துள்ள இளைஞர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஐடிஐ பிரிவில் வெல்டர், மெஷினிஸ்ட் மற்றும் பிட்டர் ஆகிய பிரிவுகள் முடித்தவர்களுக்கு 71 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20 ஆம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் விண்ணப்பங்களை பெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அனுப்பலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் இரண்டு படிநிலைகளில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என நடைபெறும் எனவும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 32 எனவும் அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கான ஊதியம் ரூ 34,300 என அறிவிக்கப்பட்டுள்ளது.