திங்கள், 17 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 23 ஜூன் 2025 (07:33 IST)

தமிழிசை பயணம் செய்யவிருந்த விமானம் திடீர் கோளாறு.. என்ன நடந்தது?

தமிழிசை பயணம் செய்யவிருந்த விமானம் திடீர் கோளாறு.. என்ன நடந்தது?
முன்னாள் தமிழக பாஜக தலைவர் மற்றும் முன்னாள் புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பயணம் செய்ய இருந்த விமானம் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னையிலிருந்து நேற்று மதுரை புறப்பட்ட விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் தாமதம் காரணமாக பாஜக மேல் இட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பயணம் செய்வதற்கு சிரமத்துக்கு உள்ளாகினர்.
 
நேற்று காலை 7:45 மணிக்கு மதுரைக்கு செல்லும் இண்டிகோ விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இந்த விமானத்தில் தான் தமிழிசை சௌந்தரராஜன் உட்பட 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ய இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதன் பின்னர், விமானத்தின் இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டு காலை 10:45 மணிக்கு விமானம் புறப்பட்டது. இந்த நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் விமானத்தின் இயந்திர கோளாறு குறித்து பயணிகளுக்கு முறையான தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பயணிகள் ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva