1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 27 மார்ச் 2024 (16:35 IST)

வேட்புமனு படிவத்தை மறந்த திமுக வேட்பாளர்...

thanga tamilselvan
தமிழகத்தில் மக்களவை தேர்தல் தேதி (ஏப்ரல் 19) அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்துக் கட்சிகளும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாத பல கட்சி வேட்பாளர்களும்,  நட்சத்திர வேட்பாளர்களும் இறுதி நாளான இன்று வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
 
இந்த நிலையில், திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் வேட்புமனு படிவத்தை மறந்துவிட்டு வந்ததாக தகவல் வெளியாகிறது.
 
வேட்பு மனு படிவத்தை மறந்துவிட்டு, வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தேனி திமுக வேட்பாளரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 
அதாவது, தேர்தல் அலுவலகத்திற்கு வந்த பிறகே வேட்பு மனு படிவம் இல்லாததை அவர் அறிந்தார்.
 
இதனால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் அமைச்சர்களும்,  நிர்வாகிகளும் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் வேட்பு மனு படிவம் கொண்டு வரப்பட்ட பின் திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.