1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 4 பிப்ரவரி 2019 (11:27 IST)

இளம்பெண்ணுடன் லாட்ஜில் தங்கிய வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்!!

குற்றாலத்தில் காதல் பிரச்சனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
திருப்பூர் மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த கார்த்திக் ராஜா(18), என்பவர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். கார்த்திக்கிற்கு அதே கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
 
இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரியவரவே, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த காதல் ஜோடி வீட்டிலிருந்து வெளியேறி குற்றாலத்தில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.
 
நள்ளிரவில் கார்த்திக் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது காதலி ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்தார். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது காதலியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.