எடப்பாடி பழனிச்சாமி, ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் வீடுகளுக்கு மர்ம மனிதன் ஒருவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக நேற்றிரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. பின்னர் இதே நபர் மீண்டும் போன் செய்து ரஜினிகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டியுள்ளார்.
இதுகுறித்த விசாரணையில் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் போலீசார் நடத்தியபோது இந்த மர்ம அழைப்பு கடலூரில் இருந்து வந்துள்ளது என்பதும் இந்த மிரட்டலை விடுத்தவர் கடலூரை சேர்ந்த பிரதீப் என்பவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது தனது செல்போன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே தொலைந்துவிட்டதாகவும், முதல்வர், ரஜினி ஆகியோர்களுக்கு மிரட்டல் விடுத்தது தான் இல்லை என்றும் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து பிரதீப்பின் செல்போனை திருடியவர் யார் என்பது குறித்த விசாரணையில் தற்போது போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.