’அடி ஆத்தி’ - ஒரே நாளில் அதிமுகவில் 91,308 பேர்!
2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது அதிமுக.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பல இடங்களில் சொற்ப வாக்குகளில் தான் திமுகவினரை வீழ்த்தி வெற்றிபெற்றனர். இதை உணர்ந்த ஆதிமுக பொதுசெயலாளரும் முதலமைசருமான ஜெயலலிதா கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டார். அதன் பிறகு கட்சியில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் பல்வேறு கட்சியை சேர்ந்த 91,308 பேர் அதிமுக.,வில் இன்று இணைந்துள்ளனர். இது தொடர்பான நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது. இதில், காங்கிரஸ் உறுப்பினராக இருந்த திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமானும் அதிமுகவில் இணைந்தார்.