வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 13 நவம்பர் 2021 (08:19 IST)

8 வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: 2வது டோஸுக்கு முன்னுரிமை

நாளை தமிழகத்தில் 8 வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடைபெற உள்ளது என அமைச்சர் அறிவித்துள்ளார். 

 
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.   
 
இதுவரை தமிழகத்தில் 7 முறை தடுப்பூசி மெகா மையங்கள் நடைபெற்ற நிலையில் எட்டாவது தடுப்பூசி முகாம் கடந்த வாரம் நடத்த திட்டமிடப்பட்டது. பின்னர் இதன் தேதி மாற்றப்பட்டு நாளை 8 வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடைபெற உள்ளது. 
 
ஆம், 50,000 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது, இந்த முறை நடக்கும் முகாமில் இரண்டாவது தவணைக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்படவுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தவிர்த்து டாக்டர்கள் தலைமையில் குழுவுனர் அமைக்கப்பட்டு வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியும் நடைபெறும்.