வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (09:21 IST)

74.34% வாக்குப்பதிவு: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு நல்ல வரவேற்பு!

நேற்று தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 74.34% வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முதற்கட்ட தேர்தல் தொடங்கிய நிலையில் காலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். 
 
மாலை வரை நடைபெற்ற வாக்குபதிவின் முடிவில் 74.34% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 81.36% வாக்குகளும், ராணிப்பேட்டையில் 81% வாக்குகளும், காஞ்சிபுரத்தில் 80% வாக்குகளும், திருப்பத்தூரில் 78% வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 72% வாக்குகளும், செங்கல்பட்டில் 67% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் இரண்டாம் கட்ட வாக்குபதிவு வரும் 9 ஆம் தேதி நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை அக்.12 ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.