வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (18:07 IST)

வேலூர் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 7 பேர் பலி… அதிர்ச்சியில் மக்கள்!

வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 7 பேர் அடுத்தடுத்து பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த 4 கொரோனா நோயாளிகள் உள்பட மொத்தம் 7 பேர் அடுத்தடுத்து மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதையடுத்து அவர்களின் இறப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறைதான் காரணம் என உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆனால் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், உயிரிழந்தவர்கள் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதாலும், சிலரின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததாலும் மட்டுமே உயிரிழந்தனர் எனக் கூறியுள்ளார். இதையடுத்து இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாம்.