Daily Horoscope
✕

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம்

Updated: திங்கள், 7 அக்டோபர் 2019 (21:00 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்து வந்த மழை தற்போது சுத்தமாக நின்றுவிட்டதால் அடுத்ததாக எப்போது மழை பெய்யும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது குடிநீர் கஷ்டம் ஓரளவு சரியாகிவிட்டாலும், விவசாயத்திற்கு இன்னும் மழை தேவை

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வளிமண்டல மேலடுக்கில் காற்றின் சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னைவானிலை மையம் தெரிவித்துள்ளது

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை நகரில் பல பகுதிகளில் லேசான மழை பெய்ய  வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அ, ஆ கூட தெரியவில்லை.. படிக்காமலே பாஸ் நிலைக்கு முற்றுப்புள்ளியா?

திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டி?!... திருமாவளவனை களமிறக்கும் விஜய்?...

வாட்ஸ்அப் மெசேஜை இனி ஷெட்யூல் செய்தும் அனுப்பலாம்.. 10 நிமிடம் முதல் 2 வாரங்கள் வரை ஷெட்யூல் செய்ய வசதி...

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழை.. வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதா?

ஃப்ளைதுபாய் விமான கவிழ்ப்பு சதி. மாலத்தீவை சேர்ந்த 2 விமானிகள் கைது.. அதிர்ச்சி தகவல்...

அடுத்த கட்டுரையில்
Show comments