செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (13:58 IST)

100 கிடாய்கள் பலியிட்டு தடபுடல் விருந்து...ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட விழா !

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள முதல்நாடு என்ற கிராமத்தில் திருவிழா நடைபெற்றது. இதில் 100 கிடாய்கள் பலியிட்டு பச்சரிசி உணவு பரிமாறினர். இந்த  விருந்தில்  ஆண்கள் மட்டுமே கூட்டம் கூட்டமாய் வந்து கலந்து கொண்டு விருந்து சாப்பிட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள முதல்நாடு என்ற கிராமத்தில், ஊரில் உள்ள மக்கள் சேர்ந்து  எல்லைப்பிடாரி அம்மனுக்கு ஒரு பீடம் அமைத்து, வருடம் தோறும் புரட்டாசி மாதம் ஒரு திருவிழா நடைபெறும். இதில் ஊரில் உள்ள ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு கிடாக்களை சாமிக்கு பலியிட்டு,பின்னர் பச்சரிசி சாதம் பொங்கி அதை ஆண்களுக்கு மட்டுமே பறிமாறுவர்.  தற்பொழுது தொடங்கி ஒரு வார காலத்திற்கு இந்த விழா நடைபெறும் என்பதால் ஆண்கள் கூட்டம் விருந்து சாப்பிட மொய்த்துவருகின்றனர்.
 
அதாவது ஒருமுறை இந்த ஊருல் 5 சகோதர்களுடன் பிறந்த பெண் ஒருவர் அவர்களின் மனைவி (அண்ணிகளால் ) துன்புறுத்தப்பட்டு, இந்த விருந்து நடைபெறும் பகுதிக்கு வந்ததும் மாயமாகியுள்ளதாக தெரிகிறது. அதன் அவர் இந்த இடத்தில் தெய்வமாகி ஊரைக் காப்பேன் எனக் கூறியுள்ளார். அதன்பொருட்டு வருடம் தோறும் ஆண்கள் இங்கு கிடாவெட்டி விருந்து உண்டு வருகின்றனர்.