வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (20:26 IST)

’ 5 ’தொகுதிகளை கிள்ளிக் கொடுக்கும் அதிமுக .... ஒத்துப் போகுமா தேமுதிக ?

வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் பரப்ரப்பாக இயங்கி வருகின்றன. இதில் அதிமுக மெகா கூட்டணி என்ற பெயரில் பாஜக, பாமக, என்,ஆர். காங்கிரஸ் போன்ற  கட்சிகளை இணைத்துக் கொண்டது. ஆனால் தேமுதிகவோடு மட்டும் இழுபறியாகவே இருந்தது. அதிமுகவின் கூட்டணி என்ற சார்பில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் வைத்து  சந்தித்தார். இதில் தமிழிசை பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனையடுத்து முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு விஜயகாந்தை சந்தித்தார். ஆனால் அது நட்பு நீதியிலான சந்திப்பு என்று கூறப்பட்டது.
 
இன்று ரஜினியும் சென்று நட்பு ரீதியாக விஜயகாந்தை சந்தித்தார். அதன் பின் அவர் கூறியதாவது :
 
நான் உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது முதன் முதலில் என்னை வந்து பார்த்தவர் விஜயகாந்த். அதனால் அமெரிக்காவிலிருந்து சிகிச்சை பெற்று திரும்பியிருக்கும் விஜயகாந்தை சந்திக்க வந்துள்ளேன் என்றார்.
 
அதன் பிறகு ஸ்டாலின் இன்று விஜயகாந்தை சந்திதார். அது மனிதாபிமான அடிப்படையிலான சந்திப்பு என்றா. அதாவது மருத்துவ சிகிச்சை பெற்று அமெரிக்காவில் இருத்து திரும்பியுள்ள விஜயகாந்தை மனிதாமானத்தில் வந்து சந்தித்தேன் என்றார். ஆனால் இத்தனை நாள் அந்த மனிதாபிமானம் எங்கே போனது எங்கே போனது..? என்பது போல் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி அதாவது ஸ்டாலினின் அண்ணன் மகனே கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இந்நிலையில் இத்தனை அரசியல் பரபரப்புக்கு இடையில் அதிமுக தன் கௌரவமான ரகசிய பேச்சு வார்த்தை தேமுதிகவுடன் நடத்திக்கொண்டே உள்ளதாக தெரிகிறது.
 
இதில் முக்கியமாக தேமுதிகவுக்கு 5 தொகுதிகளை கிள்ளிக் கொடுத்து தங்கள் மெகா  அணியில் இணையச் செய்ய சில யுக்திகளை அதிமுக கையாண்டு வருவதாகவும் தெரிகிறது.
 
அதிமுக கிள்ளிக்கொடுக்கும் இந்த 5 தொகுதிகளுக்கு, முன்னாள் எதிர்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் ஒத்துக்கொள்வார்களா என்பது கேள்விக்குறியே!
 
காரணம் பாமக வுக்கு 7 தொகுதிகளும், ராஜ்யசபாவில் 1 சீட்டு என்று அதிமுக தாராளம் காட்டியுள்ளது. என்.ஆர் காங்கிரஸுக்கு புதுச்சேரி தொகுதியும், பாஜகவுக்கு 5 தொகுதிகள் அளித்துள்ளன. இந்நிலையில் தேமுதிக, அதிமுக தருகிற 5 தொகுதிகளை பெற்றுக் கொள்ளுமா இல்லை... தனித்து போட்டியிடுவார்களா என்பது ’கேப்டன் & கோ ‘ விற்கு மட்டுமே தெரியும்.