5 நாட்களுக்கு ரயில் சேவை மாற்றம்..

Arun Prasath
திங்கள், 11 நவம்பர் 2019 (13:19 IST)
கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் பணி நடைபெறுவதால், ஐந்து நாட்களுக்கு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் பணி நடைபெறுவதால் நவம்பர் 11 முதல் 15 வரை தாம்பரம்-செங்கல்பட்டு பிரிவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இரவு 8.01,9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படவுள்ளதாகவும், அந்த ரயில்கள் கடற்கரை-தாம்பரம் வரை இயங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே இரவு 10.15 மற்றும் 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் பகுதியில் ரத்து செய்யப்படுவதாகவும், அந்த ரயில்கள் தாம்பரம்-கடற்கரை வரை இயக்கப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்ததாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே அதிகாலை 3.55, 4.35, 5.15, 5.50 காலை 6.05, 6.43, மாலை 5.18, இரவு 8.01, 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படும் எனவும், செங்கல்பட்டு-சென்னை கடற்கரை வரை அதிகாலை 3.55, 4.35, 4.50, காலை 6.40, 6.55, இரவு 7.25, 10.15, 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எல்லாம் காட்டு

பொய்க்கால் குதிரை அரசு சில காலம்தான்!. அதிமுக ஆட்சி விரைவில்!.. பழனிச்சாமி அறிக்கை!...

30 வருட கோரிக்கையை நிறைவேற்றிய விஜய்!.. பொதுமக்கள் மகிழ்ச்சி!...

இரண்டு யானைகள் மோதல்!.. இடையில் சிக்கி சென்னை பெண் மரணம்!..

இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு முதல் ‘பாரத் கௌரவ்’ சுற்றுலா ரயில்: கட்டணம் எவ்வளவு?

சிறையில் இருக்கும் பெண்களின் குழந்தைகளின் கல்வி நிலை: அறிக்கை தாக்கல் செய்யக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments