ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 14 ஆகஸ்ட் 2021 (12:31 IST)

வேளாண் பட்ஜெட்: இலவச மின்சாரத்துக்கு ரூ.4,508 கோடி

விவசாயத்துக்கு இலவச மின்சாரம் அளிப்பதற்காக இந்த ஆண்டு 4,508.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 
 
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நேற்று பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். 
 
இதனைத்தொடர்ந்து இன்று தமிழக அரசின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. விவசாயத்துக்கான தனி பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 
 
இந்நிலையில், விவசாயத்துக்கு இலவச மின்சாரம் அளிப்பதற்காக இந்த ஆண்டு 4,508.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.