1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 14 ஆகஸ்ட் 2021 (11:32 IST)

வேளாண் பட்ஜெட் 2021-22: கவனிக்கப்பட வேண்டியவை என்ன??

தமிழக அரசின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.  
 
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நேற்று பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று தமிழக அரசின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.  
 
விவசாயத்துக்கான தனி பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். இந்த வேளாண் பட்ஜெட்டில் கவனிக்கப்பட வேண்டிய சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு... 
 
தரிசு நிலங்களில் கூடுதலாக 11.75 ஹெக்டர் பரப்பில் பயிரிட்டு 75% ஆக உயர்த்த நடவடிக்கை
 
உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டு 125 மெட்ரிக் டன் என்ற இலக்கை எய்திட திட்டம்
 
வேளாண்மையின் மகத்துவத்தை தெரிந்துகொள்ளும் வகையில் மாநில அளவில் மரபுசார்பு வேளாண்மைக்கான அருங்காட்சியம் அமைக்கப்படும்
 
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கை ரூ.10.20 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
 
கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்
 
தோட்டக்கலை நடவுப்பொருட்கள் உற்பத்தி ரூ.21.80 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
 
2021-22ம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு
 
வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படும்
 
பனை மரத்தை வெட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்
 
பனை வெல்லத்தை ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை 
 
பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும்
 
30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் பனங்கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகம்
 
முதற்கட்டமாக 2,500 இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள் அளிக்கப்படும், இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு
 
2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.40 கோடி ஒதுக்கீடு
 
கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும்
 
அரசு விதைப்பண்ணைகள் மூலம் ரூ.25லட்சம் செலவில் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி
 
கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்பு திட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு
 
ஒரு டன் கரும்பு  கொள்முதல் விலை ரூ. 2,750-ல் இருந்து ரூ.2,900 ஆக அதிகரிப்பு
 
பழப்பயிர் சாகுபடிக்காக ரூ.29.12 கோடி நிதி ஒதுக்கீடு
 
சூரிய சக்தியால் இயங்கும் 5,000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நடப்பு ஆண்டில் நிறுவப்படும்
 
அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி பயிரிடவும், 1000 ஹெக்டேர் பரப்பளவில் கீரை சாகுபடி மேற்கொள்ள மானியம் வழங்கப்படும்
 
காய்கறி, கீரை சாகுபடியை பெருக்க மானியம் அளிக்கும் திட்டம் ரூ.95 கோடியில் செயல்படுத்தப்படும்
 
மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகள் கொண்ட தளைகள் 2 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்