1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 14 ஆகஸ்ட் 2021 (10:24 IST)

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு வேளாண் பட்ஜெட்டை காணிக்கை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு வேளாண் பட்ஜெட்டை காணிக்கை என அமைச்சர் பேச்சு. 
 
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நேற்று பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். 
 
இதனைத்தொடர்ந்து இன்று தமிழக அரசின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. விவசாயத்துக்கான தனி பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 
 
இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு வேளாண் பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன் என்று வேளாண்துறை அமைச்சர் கூறி தனது பட்ஜெட் தாக்கலை துவங்கினார். பொது பட்ஜெட்டை போல வேளாண் பட்ஜெட்டும் காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.