1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 4 அக்டோபர் 2022 (09:04 IST)

தூய்மை நகரங்கள் பட்டியல்: மதுரைக்கு கடைசி இடம், சென்னைக்கு எந்த இடம்?

madurai
தூய்மை நகரங்கள் பட்டியல்: மதுரைக்கு கடைசி இடம், சென்னைக்கு எந்த இடம்?
இந்தியாவின் 45 தூய்மையான நகரங்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பட்டியலில் 45வது இடத்தில் அதாவது கடைசி இடத்தில் மதுரை இடம் பிடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மத்திய அரசின் நகர்ப்புற அமைச்சகம் இந்தியாவின் தூய்மையான 45 நகரங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டது. இதில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் முதலிடத்தையும் சூரத் இரண்டாவது இடத்தையும் நவிமும்பை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன
 
தமிழகத்திலுள்ள நகரங்களான கோவை 42வது இடத்தையும் சென்னை 44வது இடத்தையும் கடைசி இடமான 45வது இடத்தை மதுரையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு பட்டியலில் திருச்சி மூன்றாவது இடத்தையும் கோவை 18 ஆவது இடத்தையும் மதுரை 26 வது இடத்தையும் சென்னை 34 வது இடத்தையும் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மதுரை கடைசி இடத்தை பிடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva