வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (20:49 IST)

40 - தொகுதிகளிலும் வெற்றி பெறும் வெற்றி கூட்டணி - திலகபாமா பேட்டி

கரூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இளம்பெண்கள் அணி மற்றும் மகளிர் அணி மாவட்ட செயற்குழு  கூட்டம் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேற்குமாவட்ட செயலாளர் கண்ணன் கிழக்கு மாவட்டசெயலாளர் முருகன் மகளிர் அணி மாநில துணை செயலாளர் சித்ரா மாவட்ட மகளிர் அணி தலைவர் மஞ்சுளா உள்ளிட்ட கட்சியின் மவட்ட அளவிலான  முக்கிய பொறுப்பாளர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 
நிகழ்ச்சியில்கட்சியினரிடையே சிறப்புரை நிகழ்த்திய பின் செய்தியாளர்களை சந்தித்த கவிஞர் திலகபாமா வரும் தேர்தலின் போது கட்சியின் பொறுப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.எங்களது கூட்டணியை பார்த்து எதிர் அணியினர் கூறும் விமர்சனங்கள் விமர்சனங்களாக இருந்தால் கூடஏற்று கொள்வோம்.ஆனால் அவர்கள்வயிற்றெறிச்சலை கொட்டிகொண்டிருக்கிறார்கள் என்ற அவர் அதிமுக தலைமையில் அமைந்த எங்கள்கூட்டணி 40-தொகுதிகளிலும் வெற்றி பெறும்  வெற்றி கூட்டணி என்றார். 
 
அதேசமயம் சட்டமன்ற தேர்தல் என்பது வேறு நாடாளுமன்ற தேர்தல் என்பது வேறு என்றும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல் சூழல் என்பது மாறிக்கொண்டே இருக்கிறது.மக்களுக்கான தேவைகளும் பிரச்சனைகளும் வேறோரு தளத்தை நோக்கி செல்கிறது.தமிழக முதலமைச்சர் கூட மருத்துவர் ராமதாஸ் அவர்களின் வழிநடத்தலின் பேரில் நாங்கள் செயல்பட தயாராக இருக்கிறோம் எனகூறியிருக்கிறார். இதுவரை இதுபோன்ற சொல் வரவில்லையே என்றார்.மேலும் நாங்கள் அன்று சொன்ன வார்த்தைகளை பின்வாங்கவில்லை என்றும் ஊழல் குற்றசாட்டுகளை நாங்கள் வாபஸ் பெறவில்லை என்றும் அதற்க்கான சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு நீதிமன்றத்தின் பொறுப்பு என்றும் அடுத்து நாங்கள் மக்கள் பணியாற்ற என்னவாய்ப்பு இருக்கிறது என்ற பார்த்து கொண்டிருக்கிறோம் என்றார். 
 
மேலும் பாட்டாளி மக்கள் கட்சியை அவர்கள் தேடுகிற இடத்தில் இருந்ததால் தான் அவர்கள் எங்களை தேடி வந்தார்கள். நாங்கள் அவர்களை தேடி செல்லவில்லை. நிர்வாகத்தை  சரியாகநடத்த தெரிந்தால் ஊழல் வராது.தெரியாததால் ஊழல் வருகிறது என்றும் அதிகாரமும் பணமும் ஓரிடத்திலிருக்கிறது. அதோடு தற்போது நிர்வாகமும் சேர்ந்திருக்கிறது ஆகையால் இனி மேல்நல்ல விஷயமாக  நடக்கும் என்றார்.மக்கள் நலன் குறித்து அந்தந்த காலத்தில் எப்படி முடிவெடுக்க வேண்டுமோ  அதற்கேற்ப அந்தந்த காலத்தில் முடிவெடுக்கபடும் என்ற அவரிடம் ஆக இது தேர்தலுக்கான கூட்டணியா? என கேட்ட போது நிச்சயமாக தேர்தலுக்கான கூட்டணி தான் தொடரும் கூட்டணி அல்ல என்றார்.சட்டமன்ற தேர்தலின் போது கூட்டணி தொடருமா என்றால் சட்டமன்ற தேர்தல் வரும் போது தான் தெரியும் என்றார்.
 
கூட்டணியின் போது மதுவிலக்கு என்ற நிறைவேற்ற முடியாத கோரிக்கையை வைத்துள்ளாரே என்ற கேள்விக்கு ஆடத் தெரியாதவர்களுக்கு தான் அம்பலம் கோணல் என்றும் எங்களை பொறுத்தவரை எங்களது எல்லா தேர்தல் அறிக்கையிலும்  இது செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பினார்கள்.ஏழைகளுக்கு 2500-அளிக்கவேண்டுமென நாங்கள் அறிவித்தோம்.இது நிதி நிலை அறிக்கையிலும் வந்துள்ளது.ஆரம்ப காலங்களிலிது சாத்தியமில்லை என்றார்கள். ஆனால் இன்று மத்திய அரசும் மாநில அரசுக்கும் சாத்தியமாகிறது. இதே போல் கல்வி திட்டத்திலும் அறிவித்த திட்டங்களை இன்று ஆந்திர மாநிலம் செயல்படுத்தி வருகிறது என்றார்.