1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 19 நவம்பர் 2022 (15:58 IST)

இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு: 40% தேர்வர்கள் ஆப்சென்ட்!

tnpsc
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை எழுத விண்ணப்பம் செய்திருந்த 40% விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
பல்வேறு பணியிடங்களுக்கான 92 காலியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு இன்று நடைபெற்றது. 92 இடங்களுக்கு சுமார் 3 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளத். மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர்கள் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
92 காலியிடங்களுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்ததால் தங்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பே இல்லை என பலர் கருதியதால் தேர்வு எழுத வரவில்லை என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran