1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 29 பிப்ரவரி 2024 (18:59 IST)

தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய புகாரில் 4 பேர் கைது!

ஆதீனத்தின் ஆபாசப் படங்கள் தங்களிடம் இருப்பதாகக்  மிரட்டிய புகாரில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மயிலாடுதுறையில் உள்ள தரும்பருரம் ஆதீனம் 500 ஆண்டுகள் பழமையானது. அந்த ஆதீனத்தின் 27வது சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார்  சுவாமிகள்  இருந்து வருகிறார்.
 
கடந்த சில மாதங்களாக ஆதீனத்தை சிலர் மிரட்டுவதாகவும் பணம் பறிப்பதாகவும் தகவல் வெளியானது.
 
இதுகுறித்து மடாதிபதியின் சகோதரர் விருத்தகரி மயிலாடுத்துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆதீனத்தின் ஆபாசப் படங்கள் தங்களிடம் இருப்பதாகக்  9 பேர் மிரட்டுவதாக புகார் அளித்திருந்தார். 
 
இதுதொடர்பாக மிரட்டல் விடுத்த 9 பேர் மீதும்  வழக்குப் பதிவு செய்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், திருக்கடையூர் விஜயகுமார், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் உள்ளிட்ட 4 பேரை கைது சிறையில் அடைத்தனர்.