சென்னையில் நாளை 33வது மெகா தடுப்பூசி முகாம்!
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,211 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35,49,406 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,616 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 2,000 இடங்களில் கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இடு வரை தமிழகத்தில் 32 கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதில் 40,34,207 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
நாளை 33வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் என 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக்கொளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.