1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (12:06 IST)

12ம் வகுப்பு தேர்வை எத்தனை மாணவர்கள் எழுதவில்லை தெரியுமா?

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தமாக 32,625 பேர் பங்கேற்கவில்லை என தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

 
கடந்த சில நாட்களாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது என்பதும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு எழுதி வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்நிலையில் தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தமாக 32,625 பேர் பங்கேற்கவில்லை என தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 6 பாட தேர்வுகளையும் 30,719 மாணவர்கள் எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக 10 ஆம் வகுப்பு கணிதத் தேர்வு 45,618 மாணவர்கள் எழுதவில்லை என தமிழக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்ற நிலையில் அதிகமான மாணவர்கள் ஏன் எழுதவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.