செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 29 மார்ச் 2023 (11:57 IST)

3 ஆயிரம் அரசு ஊழியர்கள் திடீர் போராட்டம்: அலுவலகங்கள் வெறிச்சோடியதால் பொதுமக்கள் அவதி..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீரென 3000 அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்ததை அடுத்து அந்த பகுதியை பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இன்று 3000 அரசு ஊழியர்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்லவில்லை என்பதால் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன. 
 
அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக அரசு அலுவலர்களுக்கு பல்வேறு பணிகள் காரணமாக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று கொண்டிருக்கின்றனர்.
 
இந்த நிலையில் எங்கள் கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை என்றால் ஏப்ரல் 19ஆம் தேதி இரண்டாம் கட்டமாக சென்னையில் அரச ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்வார்கள் என்று அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva