வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 மார்ச் 2023 (21:23 IST)

''12 மணி நேரம் மின்வெட்டு''...பாகிஸ்தானில் மக்கள் போராட்டம்

Pakistan PM
பாகிஸ்தான் நாட்டில் மின்வெட்டைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் இம்ரான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், புதிய பிரதமராக ஷபாஷ் ஷெரீப்  நியமிக்கப்பட்டார்.

இந்த நாட்டில் இலங்கையைப் போன்று பொருளாதார நெருக்கடி நிலவி வரும்   நிலையில், அண்டை நாடுகள் மற்றும் ஐஎம்.எஃப். ஐக்கிய அரபு நாடுகள், மற்றும் சவூதி அரேபியாவிடம் அந்த நாட்டு உதவ கேட்டுள்ளது.

இந்த நிலையில், பொருளாதார நெருக்கவி நிலவுவதால்,  வாழைப்பழம் டஜன் ரூ.250, முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. இதேபோல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அப்பாவி மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், முக்கிய நகரங்கள் மற்றும் புற நகர்ப்புறங்களில் இரவு 10 முதல் காலை 10 மணி வரை சுமார் 12 மணி நேரம் வரை மின் தடைபட்டுள்ளதால், மக்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், இரவில் பெரும்பாலான பகுதிகள் இருளில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், மக்கள் மின்வெட்டைகண்டித்து, எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் மின்வெட்டு சரிசெய்ய வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.