குடிபோதையில் 30 இளம் பெண்கள் ஆபாச நடனம்: சென்னை தனியார் விடுதியில் அதிர்ச்சி சம்பவம்!
சென்னையில் உள்ள தனியார் விடுதியில் 30 இளம் பெண்கள் குடி போதையில் ஆபாச நடனமாடியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை அண்ணா சாலையை ஒட்டிய ராயப்பேட்டை ஜெனரேட்டர் சாலையில் தனியார் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதியில் நள்ளிரவில் மது விருந்து மற்றும் பெண்களின் ஆபாச நடனம் மற்றும் குத்தாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது
இதனையடுத்து போலீசார் அதிரடியாக அந்த விடுதியில் சோதனை செய்தபோது 30க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களுடன் குடிபோதையில் அரைகுறை உடையில் ஆபாச ஆபாச நடனம் ஆடி வந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து 30 பெண்களின் முகவரி மற்றும் செல்போன் எண்களை வாங்கி கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போதையில் இருந்த வாலிபர்களையும் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். மேலும் நள்ளிரவு விருந்துக்கு ஏற்பாடு செய்த தனியார் விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன