1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (20:35 IST)

தீபாவளி சிறப்பு விற்பனை: 30% தள்ளுபடி செய்கிறது கோ -ஆப்-டெக்ஸ்!

தீபாவளி சிறப்பு விற்பனை: 30% தள்ளுபடி செய்கிறது கோ -ஆப்-டெக்ஸ்!
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி உள்பட முக்கிய பண்டிகையின்போது கோ-ஆப்டெக்ஸ் சிறப்புத் தள்ளுபடிகளை செய்யும் என்பது தெரிந்ததே. தள்ளுபடி செய்யப்படும் காலத்திலெல்லாம் பொதுமக்கள் அதிக அளவில் கோ-ஆப்டெக்ஸ் கடைகளில் பொருட்களை வாங்கி வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு தீபாவளி திருநாள் நெருங்கி வருவதை அடுத்து இந்த ஆண்டும் சிறப்பு தள்ளுபடி செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதிகபட்சமாக ஒரு சில ரகங்களுக்கு 30% தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை ரூபாய் 200 கோடி என கோ-ஆப்டெக்ஸ் இலக்கு நிர்ணயித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதுவகை மாடல்களில் அதிக வகையான ஜவுளி வகைகளும் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது