ராஜ்பவனில் 3 பேருக்கு கொரோனா: தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட தமிழக ஆளுநர்
தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் நாளை மறுநாளுடன் முடிவடையும் ஆறாம் கட்ட ஊரடங்கிற்கு பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்து பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
இந்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்பட பல துறையை சேர்ந்த விஐபிக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின்படி ராஜ்பவனில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனை அடுத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஆளுநர் மாளிகையில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் ராஜ்பவன் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது