நடிகர் ஷ்யாம் நடிக்க வேண்டிய கதையில் விஜய் நடித்தாரா? நம்ப முடியலையே?
நடிகர் ஷ்யாம் ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய 12 பி படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
ஆனால் அதற்கு முன்பே குஷி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 12 பி படம் வந்த பிறகு அவர் ஒரு சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வளர ஆரம்பித்தார். அந்த நேரத்தில் அவருக்கு வந்த ஒரு கதைதான் ஷாஜகான். இயக்குனர் கே எஸ் ரவி இந்த படத்தை இயக்க சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர் பி சௌத்ரி தயாரிப்பதாக இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் ஷ்யாம் வேண்டாம் என்று முடிவெடுத்த ஆர் பி சௌத்ரி அவருக்குப் பதில் விஜய்யிடம் பேசி சம்மதம் வாங்கினாராம்.
ஆனால் அந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் இன்று வரை படத்தின் பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.