திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 19 ஜூன் 2023 (13:34 IST)

சென்னையில் மழை நீர் தேங்கியதாக 70 புகார்கள் வந்தன: சென்னை மாநகராட்சி அதிகாரி பேட்டி..!

Chennai Corporation
சென்னையில் மழை நீர் தேங்கியதாக 70 புகார்கள் வந்தன என சென்னை மாநகராட்சி துணை ஆணையர் சமீரன் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
சென்னையில் மழை நீர் தேங்கியதாக 70 புகார்கள் வந்தன என்றும், புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மழைநீர் அகற்றப்பட்டது என்றும் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் சமீரன் தெரிவித்தார்.
 
மேலும் வானிலை ஆய்வு மையம் முன்பே எச்சரிக்கை கொடுத்திருந்ததால் தயார் நிலையில் இருந்தோம் என்றும், ஒருசில இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கியது என்றும், பெரும்பாலான சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்றும், கடந்த ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கையால் தற்போது பெரிதாக மழைநீர் தேங்கவில்லை என்றும் கூறினார்,.
 
மேலும் சாலை மற்றும் மெட்ரோ பணிகள் நடைபெறும் பகுதிகளில் மட்டுமே ஒருசில இடங்களில் நீர் தேக்கம் இருந்துள்ளது என்றும், சென்னையில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது என்றும் கேள்வி ஒன்றுக்கு சமீரன் பதிலளித்தார்.
 
Edited by Siva