1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2017 (11:41 IST)

21 ஆம் நூற்றாண்டின் சிறந்த ஜோக்: தினகரன் குறித்து ஜெயகுமார்

தினகரன் ஆதரவு எம்பிக்கள் மூன்று பேர் நேற்று ஒன்றிணைந்த அதிமுகவில் இணைந்தது குறித்து கருத்து கூறிய டிடிவி தினகரன், தன்னிடம் கூறிவிட்டே மூன்று எம்பிக்கள் எதிர்முகாமுக்கு சென்றதாக பேட்டி அளித்திருந்தார்.
 
இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய அமைச்சர் ஜெயகுமார், 'என்னிடம் கூறிவிட்டே 3 எம்பிக்கள் அணி மாறினார் என டிடிவி தினகரன் கூறுவது 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த ஜோக்' என்று கூறினார். மேலும் தினகரனின் கூடாரம் காலியாகி வருவதாகவும், விரைவில் அவர் பக்கமுள்ள அனைவரும் ஒன்றிணைந்த அதிமுகவுக்கு வருவார்கள் என்றும் கூறினார்.
 
மேலும் ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனனை வேட்பாளராக நிறுத்த தனக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை என்றும் அதிமுகவில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்தார். நாளை நடைபெறும் ஆட்சிமன்ற குழுவினர் கூட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வேட்பாளர் தேர்வு இருக்கும் என்று தான் நம்புவதாகவும் ஜெயகுமார் தெரிவித்தார்.