ஐபிஎல் டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்ற 20 பேர் கைது..போலீசார் அதிரடி
சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்றதாக 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஐபிஎல் -2023 கிரிக்கெட் போட்டியில் நடைபெற்று வரும் நிலையில், இப்போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடியது.
இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களைக் கைது செய்ய வேண்டுமென்று சமீபத்தில் சென்னை நகர ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தர்.
இந்த நிலையில், நேற்று ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 9 வழக்குகள் பதிவு செய்து, 15 நபர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 22 டிக்கெட்டுகள் மற்றும் ரூ. 6 ஆயிரம் பணம், பறிமுதல் செய்தனர்.
ஐபில் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்றதாக 22 ஆம் தேதி மற்றும் 23 ஆம் தேதி ஆகிய 2 நாட்களில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 20 நபர்களை கைது செய்து. அவர்களிடம் இருந்து 54 டிக்கெட்டுகள் மற்றும் 11,300 ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.