திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 30 மே 2022 (19:21 IST)

2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும்: பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு

plus 2
பிளஸ் 2 வேதியியல் பாட கேள்விகளுக்கு 2 மதிப்பெண்கள் போனஸ் வழங்கப்படும் என அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது
 
 பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என்றும், அதில் பகுதி 1-அ, வினா எண் 9 அல்லது பகுதி 1-ஆ, வினா எண் 5க்கு விடையளித்திருந்தால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது
 
மேலும் பகுதி -2, வினா எண் 29 க்கு விடையளித்திருந்தால் முழுமதிப்பெண் வழங்கப்படும் என்றும் அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது
 
அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ள இந்த அறிவிப்பு  பிளஸ் 2 மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.