செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2024 (14:26 IST)

மெரினா வான் சாகச நிகழ்ச்சிக்குப் பிறகு 18 டன் குப்பை அகற்றம்… பணியில் ஈடுபட்ட 128 தூய்மைப் பணியாளர்கள்!

சென்னையில் வான் சாகச நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக நடந்த நிலையில், இந்த நிகழ்ச்சியை பார்க்க சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக இருந்துள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து மக்கள் வெளியேறும் போது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு அமளியாகியுள்ளது.

அத்தனை லட்சம் மக்களை வழிநடத்தத் தேவையான போலிஸார் நியமிக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி  ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், 93 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் மெரினா கடற்கரையில் அதிகளவு குப்பைகள் சேகரமாகியுள்ளன. இதனை அகற்ற 108 தூய்மைப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, 18.5 டன் எடையுள்ள குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த குப்பைகளில் அதிகமாக நொறுக்குத் தீனிகளின் பிளாஸ்டிக் பைகளும், குளிர்பானா பாட்டில்களும் இருந்ததாகத் தெரிகிறது.