ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2024 (10:50 IST)

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பெண்.. நடுவானில் பிரிந்து உயிர்..!

Flight
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த பெண் ஒருவர், நடுவானில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை, மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் என்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பெண் பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. தூக்கத்திலேயே அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு, தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக தெரிகிறது.

உயிரிழந்த பெண்ணின் பெயர் கலையரசி என்றும், விமானம் சென்னையில் இறங்கியதும், அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தனர்.

விமானத்தில் உயிரிழந்த கலையரசியின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்ததாகவும், அவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran