1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2024 (14:21 IST)

விமான சாகச நிகழ்ச்சி: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Chennai air show

சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

 

 

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டை சிறப்பிக்கும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதை காண பல பகுதிகளில் இருந்தும் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடற்கரையில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இதுவரை 5 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போதுமான ஏற்பாடுகள் இல்லாததே உயிரிழப்புகளுக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 

 

இந்நிலையில் ”கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் விலைமதிப்பற்ற உயிரிழப்பு ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” என்று இரங்கள் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரண தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

 

Edit by Prasanth.K