திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (09:42 IST)

ஒரே நாளில் 17.5 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள்! – தமிழ்நாடு கொரோனா தடுப்பூசி முகாம்!

தமிழ்நாடு முழுவதும் நேற்று பல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்ட நிலையில் 17.5 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் முகக்கவசம் கட்டாயமாக்கபட்டுள்ள நிலையில், மீண்டும் தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நேற்று தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு நேரில் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்தார்.

நேற்று ஒருநாளில் தடுப்பூசி முகாம்கள் மூலமாக 17,55,364 பேருக்கு முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மக்கள் நலவாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. நேற்று முகாம்கள் நடந்ததால் இன்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.