கொரோனாவுக்கு பலியான 17 வயது சென்னை இளம்பெண்: அதிர்ச்சி தகவல்
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 17 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெண்ணின் கொரோனா வைரஸ் குறித்த சோதனையின் முடிவு வரும் முன்னரே அவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சென்னையில் 17 வயது இளம்பெண் ஒருவர் நேற்று மாலை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் அனுமதிக்கப்பட்ட நான்கே மணிநேரத்தில் உயிரிழந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த பரிசோதனையின் முடிவு வரும் முன்னரே அவர் இறந்து விட்டதாகவும் தெரிகிறது
இதனை அடுத்து கொரோனா வைரஸ் பரிசோதனையின் முடிவில் அந்த இளம்பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாக செய்யப்பட்டது. இதேபோல் வேலூரில் 34 வயது பெண் ஒருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நான்கு நாட்களில் உயிரிழந்தார். 17 வயது இளம்பெண் மற்றும் 34 வயது நடுத்தர பெண் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதால் சமூகத் தொற்று பரவி விட்டதோ என்ற அச்சத்தை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.