திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (15:18 IST)

வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய 15 பேரின் ஜாமின் மனு.. அதிரடி உத்தரவு..!

கரூரில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வந்த போது அவரை திமுகவினர் சில தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. ’
 
இந்த புகாரின் அடிப்படையில் திமுக மாமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 15 பேரின் ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அனைத்தும் அனுக்களும் தள்ளுபடி செய்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
 
ஐடி அதிகாரிகளை தாக்கி வாகனங்களை சேராதனப்படுத்த வழக்கில் ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அடுத்த கட்டமாக 15 பேர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva