வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2024 (12:57 IST)

தீபாவளிக்கு 14,016 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! எங்கேயிருந்து புறப்படும்? - அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

TNSTC

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் பயணிக்க வசதியாக 14,016 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

 

 

அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் பேருந்துகள், ரயில்களில் முன்பதிவுகள் வேகமாக முடிந்துள்ளது. இதனால் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் அக்டோபர் 28 தொடங்கி 30ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் 5 வெவ்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த ஆண்டு கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாது

 

தமிழகம் முழுவதும் அக்டோபர் 28 முதல் 30ம் தேதி வரை 14,016 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 11,176 பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ளது. தீபாவளி முடிந்து சென்னை திரும்புபவர்களுக்காக 9,441 பேருந்துகள் இயக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K