1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 6 நவம்பர் 2021 (10:32 IST)

சென்னை மாநகராட்சியில் மட்டும் 138 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள்!

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் அதை மீறியும் பலர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

சென்னையில் காலையில் ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. ஆனால் அந்த அறிவிப்பை மீறி நேற்று நாள் முழுவதும் பட்டாசுகள் வ்எடிக்கப்பட்டன என்பதும் இதன் காரணமாக ஒரு சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் தீபாவளி அன்று சென்னையே புகைமண்டலமாகக் காணப்பட்டது. இந்நிலையில் தீபாவளி அன்று வெடிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகள் சுமார் 138 மெட்ரிக் டன் அப்புறப்படுத்தப் பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.