திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (14:11 IST)

13 லட்சம் குடும்ப அட்டைகள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு!

தமிழகம் முழுவதும் தொடர்ந்து 3 மாதங்களாக பொருட்ககள் வாங்காத ரேசன் அட்டைகள் தகுதி நீக்கம் செய்யப்படவாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்றது. அதன்பின், பல்வேறு அறிவிப்புகள், திட்டங்களையும் மக்களுக்கு செய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைகளை கணக்கெடுக்கும் பணியில் உணவுப் பொருள் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஈடுபட்டுள்ளது. எனவே போலியான குடும்ப அட்டைகள்  நீக்கப்படும். இதன் மூலம் உண்மையான பயனர்கள் பயன்பெறுவர்.

இந்த நிலையில், தொடர்ந்து 3 மாதங்களாக ரேசனில் பொருட்ககள் வாங்காத 13 லட்சம் குடும்ப அட்டைகள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.