முன்னாள் காதலியைப் புகைப்படம் காட்டி மிரட்டிய மாணவர்… பதிலுக்கு மாணவி என்ன செய்தார் தெரியுமா?

Last Updated: சனி, 10 ஏப்ரல் 2021 (15:47 IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் காதலனை கூலிப்படையினரை அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார் 12 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி ஒருவர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பனக்குடி என்ற பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் சக மாணவியை காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்த நிலையில் மாணவி வேறு ஒரு மாணவருடன் பழகி வந்துள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் முன்னர் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைக் காட்டி அவர் வீட்டில் பெண் கேட்க போவதாக சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவி விக்னேஷை மிரட்ட கூலிப்படையினரை ஏவ முடிவு செய்துள்ளார். அவர்களின் யோசனைப்படி விக்னேஷுக்கு போன் செய்து பெத்தானியா மலைப்பகுதிக்கு வர சொல்லியுள்ளார்.

அங்கு வந்த விக்னேஷை கூலிப்படையினர் நாட்டு வெடிகுண்டுகளைக் காட்டி மிரட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்த விக்னேஷ் காவல் நிலையத்தில் புகாரளிக்க கூலிப்படையினர் 4 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மாணவியை தேடி வருகின்றனர்.

இதில் மேலும் படிக்கவும் :