1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 டிசம்பர் 2023 (13:39 IST)

காப்பி அடித்ததாக கண்டித்த ஆசிரியர்கள்.. 12ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

தேர்வில் காப்பி அடித்ததாக 12ம் வகுப்பு மாணவியை 5 ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறப்பட்ட நிலையில் மனமுடைந்த அந்த மாணவி வீட்டுக்கு சென்று தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டதை அடுத்து ஐந்து ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் விழுப்புரத்தில் 12ம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு எழுதிய போது அவருக்கு காப்பி அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 
 
மேலும் அந்த மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து  டிசி பெற்றுக்கொள்ள ஆசிரியர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால் மணமுடைந்த 12 ஆம் வகுப்பு மாணவி வீட்டுக்கு சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 
 
இதனை அடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக விழுப்புரம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஐந்து பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva