இன்றும் தேர்வு வினாத்தாள் கசிந்தது! – அதிர்ச்சியில் ஆசிரியர்கள்!
12ம் வகுப்பு திருப்புதல் தேர்வில் ஏற்கனவே வினாத்தாள் கசிந்த நிலையில் இன்றும் ஒரு பாடத்தின் வினாத்தாள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது தளர்வுகள் காரணமாக அன்றாடம் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது.
தேர்வுகள் நடந்து வரும் நிலையில் முன்னதாக 12ம் வகுப்பு உயிரியல் பாட வினாத்தாள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மீண்டும் வணிக கணிதம் பாடத்தின் வினாத்தாள் வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.