குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்.....
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காட்டுவளவு பகுதியில் வசித்து வந்தவர் பிரபாகரன்(35). இவரது மனைவி மகரதம்(30). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் பிரபாகரன் வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்ததாகத் தெரிகிறது. இதை அறிந்த மரகதம் பிரபாகரனு சண்டையிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காலையும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதனால் விரக்தி அடைந்த மரகதம் தோட்டத்து வீட்டில் உள்ள கிணற்றில் தன் இரு குழந்தைகளையும் தள்ளிவிட்டு, அவரும் தன் காலில் கயிறு மூலம் கல்லைக்கட்டி கிணற்றில் குதித்துள்ளார்.
இதையடுத்து சுமார்5 மணி நேரம் கழத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து 3 சடலங்களையும் மீட்டனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.