வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வியாழன், 26 மார்ச் 2020 (15:28 IST)

தமிழகத்தில் தடையை மீறிய 1252 பேர் மீது வழக்குப் பதிவு !

தமிழகத்தில் தடையை மீறிய 1252 பேர் மீது வழக்குப் பதிவு !

சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று  இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் சில நாட்களிக்கு முன் பிரதமர் நரேந்திரமோடி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். இது அனைத்து மாநில முதல்வர்களும் இந்த ஊரடங்கு உத்தரவை கடைபிக்க வேண்டும் என மக்களுக்குகடுமையான உத்தரவிட்டுள்ளனர். அதை மாநில போலீஸாரும் தீவிரப்படுத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் குறைந்தபாடில்லை;

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் நடமாடியதாக இதுவரை 1252 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வதந்தி பரப்பியதாக 16 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அறிகுறியுடன்  வீட்டு தனிமையில் இல்லாமல் சுற்றியவர்கள் 16 பேர் மீது வழக்கு பதிசெய்யப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில், நேற்று ஊரடங்கை மீறி வந்தவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். தமிழகத்தி சிலரை போலீஸார் தோப்புக்கரணம் போட  செய்து விநோத தண்டனை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.