Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 மணி முதல் 4 மணி வரை வெளியே வரவேண்டாம் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !

Updated: திங்கள், 17 ஜூன் 2019 (09:10 IST)
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் வெப்ப அலை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கோடை காலத்திற்கு முன்பே ஆரம்பித்த வெயில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் இப்போதும் மக்களை வாட்டி எடுத்து வருகிறது. அதிகமான வெப்பத்தால் தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து செய்திக் குறிப்பில் ‘திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் வேலூர் ஆகிய சில வட மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும். அதனால் 11 மணி முதல் 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்த்து சன் ஸ்ட்ரோக்கைத் தவிர்க்கவும்’ என அறிவித்துள்ளது.

 

எல்லாம் காட்டு

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு...

கோவையில் சேரன் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா...

ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும்.. சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப்படிப்பு.. கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு..

பிரியாணி சாப்பிட்டதால் உடல்நலக்குறைவு.. நஷ்ட ஈடாம ரூ.96,500 வழங்க உத்தரவு..

அடுத்த கட்டுரையில்
Show comments