Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 , 12 வகுப்புகளுக்கு அறிமுகமாகும் 500 மதிப்பெண் நடைமுறை..

Written By Arun Prasath
Updated: வியாழன், 19 செப்டம்பர் 2019 (14:09 IST)
11, 12 ஆம் மாணவர்களுக்கான 4 முக்கிய பாடங்களில் தற்போது 3 முக்கிய பாடங்களை மட்டும் தேர்வு செய்து படிக்கலாம் என்ற வாய்ப்பை பள்ளிக்கல்வித் துறை உருவாக்கியிருக்கிறது.

11,12 ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் தற்போது தமிழ்/ஆங்கிலம் உட்பட முக்கிய 4 பாடங்களை தேர்வு செய்து படிக்கவேண்டும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் தற்போது மாணவர்கள் அவர்களின் உயர்கல்விக்கு அவசியமில்லாத பாடங்களை விட்டுவிட்டு 3 பாடங்களை மட்டும் தேர்வு செய்து படிக்கலாம் என்ற புதிய நடைமுறையை பள்ளிக்கல்வித் துறை அறிமுகப்படுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி, அறிவியல் பிரிவில் 3 முக்கிய பாடங்களை மட்டும் தேர்வு செய்து படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு 4 வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பிரிவு 1-ல் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களையும், பிரிவு 2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களையும் தேர்வு செய்து படிக்கலாம் எனவும், பிரிவு 3-ல் கணிதம், இயற்பியல், கணிணி அறிவியல் ஆகியவற்றையும், பிரிவு 4-ல் வேதியியல், மனையியல், உயிரியல் ஆகிய பிரிவுகளில் எதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கலைப் பிரிவில் 3 முக்கிய பாடங்களை தேர்வு செய்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் படி, பிரிவு 1-ல் வரலாறு, புவியியல், பொருளியல் ஆகியவையும், பிரிவு 2-ல் பொருளியல், வணிகவியல், கணக்கு பதிவியல் ஆகியவையும், பிரிவு 3-ல் வணிகவியல், வணிக கணிதம் & புள்ளியியல், கணக்கு பதிவியல் ஆகியவையும், பிரிவு 4-ல் வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல் ஆகியவையும், பிரிவு 5-ல் சிறப்பு தமிழ், வரலாறு, பொருளியல் ஆகியவைகளில் ஏதேனும் ஒரு பிரிவை தேர்வு செய்து படிக்கலாம் என பள்ளிகல்வித் துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக 600 மதிப்பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு வரும் நிலையில், 3 முக்கிய பாடங்களை படிப்பவர்களுக்கு 500 மதிப்பெண் உடைய சான்றிதழ் வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லாம் காட்டு

முக ஸ்டாலினுக்கு Z பிரிவு பாதுகாப்பு வாபஸ்!.. தமிழக அரசு அதிரடி...

பட்டம் விடும்போது காற்றில் பறந்த இளைஞர்!.. ஒரே சிரிப்பு!.. வீடியோ பாருங்க!...

நேபாள வெள்ளம் எதிரொலி!.. இமயமலை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு!...

ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க!.. முடிவை மாற்றிய நேபாள அரசு!...

நேபாள வெள்ளம்.. பால்கனியில் நின்றவர்கள் தப்பித்தார்களா?!.. நடந்தது என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments